ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..! – புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:37 IST)
சமுத்திரக்கனி நடித்து சமீபத்தில் வெளியான ரைட்டர் படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சமுத்திரக்கனி நடித்து ப்ராங்க்ளின் ஜாக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ரைட்டர். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் திலீபன், இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். காவல்துறையில் எழுத்தராக பணிபுரியும் ஒரு கதாப்பாத்திரத்தை கொண்டு காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை, அரசியலை விவரித்துள்ளதாக படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் “பிரமாதமான படம், ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லோரும் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க. சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார், பிராங்ளினுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கு” என்று பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்