எம்ஜிஆர் பட பூஜைக்கு தலைமை தாங்குகிறார் ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (23:40 IST)
எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை அடுத்து அதேபோல் வெளிநாட்டு காட்சிகளுடன் படமாக்க திட்டமிட்டிருந்த படம் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ. ஆனால் எம்ஜிஆர் தமிழக முதல்வர் ஆகிவிட்டதால் இந்த படம் எம்ஜிஆரின் நிறைவேறாத கனவாகிவிட்டது

இந்த நிலையில் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமான நகைச்சுவை நடிகரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஐசரிவேலனின் மகன் ஐசரிகணேஷ் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க அனிமேஷனில் எம்ஜிஆரின் காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ளது

இந்த படத்தின் தொடக்கவிழா நாளை எம்ஜிஆரின் பிறந்த நாளில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தலைமை தாங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவதுள்ளது. இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அருள்மூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்