ரஜினியின் அண்ணாத்த பட ஷூட்டிங் அறிவிப்பு வெளியானது ! ரசிர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:02 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த், இவரது ஒவ்வொரு
படமும் திருவிழா போல் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினின் அடுத்த படமான அண்ணாத்த சிவா இயக்கத்தில் உருவாகிவந்த நிலையில் கொரோனாவால் தடைபட்டது.

60 வயதுக்கு மேல் உள்ள நடிகர் ரஜினி இயல்பு நிலைக்குத் திரும்பியதும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தற்போது 50% படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்துள்ளதால் சக நடிகர்களிடம் இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து.

அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் அடுத்த வருடம் பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டில் படம் வெளியாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகிறது.

அதேசமயம் அண்ணாத்தே பட ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இப்படத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும்  கொரொனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இப்படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொள்வாரா என்று அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்