நடிகர் அஜித் பெயரில் சிலர் மோசடி செய்வதாக சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியான நிலையில் இப்போது ஜாக்கி சானும் அதுபோல ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை சில ஆண்டுகளாகவே தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் பெயரை பயன்படுத்தி சில மோசடிகள் நடப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அவரின் வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இதுபோன்றதொரு அறிக்கையை இப்போது ஆசியாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ஜாக்கி சானும் வெளியிட்டுள்ளார்.
அதில் ‘எனது நிறுவனத்தின் பெயரை சொல்லி சிலர் மோசடி செய்து வருகின்றனர். எனது நிறுவனம் சம்மந்தமான அனைத்து விஷயங்களும் குறிப்பிட்ட சிலர் மூலமாக அறிவிக்கப்படும். மற்றவர்கள் சொல்வதை நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது.