சூப்பர்ஸ்டார்ரஜினியின்அண்ணாத்ததிரைப்படம்பெரியஎதிர்ப்பார்ப்புஎதிர்பார்ப்புஏற்படுத்தியுள்ளநிலையில்இப்படத்தின்படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
விஸ்வாசம் படத்திற்குப் பிறகு சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. கொரோனா காலப் பொது ஊரடங்கிலிருந்து திரைப்படத்துறையினருக்கு ஷூட்டிங் நடத்த அரசு அறிவித்த போதிலும் அண்ணாத்த படக்குழு மீண்டும் ஷீட்டிங் நடத்துவதாக அறிவிக்கவில்லை. அதனால் அடுத்தாண்டில்தான் ஹூட்டிங் நடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஐதாராபாத்தில் உள்ள ராமோஜி ராஜ் பிலிம் சிட்டியில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பைத் தொடங்க இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்துகொள்ளவுள்ளார். அவருக்கு ஏற்றாற்போல் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைத் தான் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல் குறைந்த அளவிலான ஆட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகாவும் தகவல் வெளியாகிறது.
இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.