மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரஜினியை ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் வந்து சந்தித்தனர்.
ரஜினிகாந்த் நேற்று சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வழக்கமான பரிசோதனை நடந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின் படி ரஜினிக்கு ரத்த நாள திசுக்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்துக்கு இரத்த நாள திசு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அதனை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் அது மட்டுமின்றி நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியை சந்தித்தனர். இதன் பின்னர் ஒய்.ஜி மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார். அவர் ஆரோக்கியமாக உள்ளார். இன்னும் 4 நாட்கள் வரை சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்.
அதாவது தீபாவளிக்கு படம் வெளியாகும் போது ரஜினி மருத்துவமனையில் இருந்து வெளியாகி வீட்டில் இருப்பார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.