மேலும் 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்?: கட்சி தொடங்குவது தாமதமாகிறது

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (12:14 IST)
ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார் அப்போது ரஜினி மக்கள் மன்றத்தை கிராம வாரியாக ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கினார். இதற்காக செயலியும் அறிமுகப்படுத்தினார். ஆனால் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்தார். ரஞ்சித் இயக்கத்தில்  காலா படத்தில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் ரஜினிகாந்த் நடித்தார். ஆனால் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல், கட்சிப் பணிகளிலும் தீவிர ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். அன்றாட நிகழ்வுகள் ,மக்கள் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் பெரிய அளவில் எந்த கருத்துக்களையும் விமர்சனங்களையும் ரஜினிகாந்த் முன் வைக்க விரும்பவில்லை. தற்போது அமெரிக்கா சென்று  குடும்பத்துடன் ஓய்வெடுத்து வரும் ரஜினி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
 
ஒரு படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். லஞ்சம் ஊழலுக்கு எதிராக முதல்வன் பாணியில் முருகதாஸ் இப்படத்தை உருவாக்க உள்ளாராம். இதையடுத்து அஜீத் நடிக்கவுள்ள பிங்க் படத்தை இயக்கி வரும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க போகிறாராம் ரஜினி. வினோத் சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம் இதில் தனுசும் ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. 
 
இந்த இரண்டு படங்களுக்கு பின்பு ரஜினி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார். அனேகமாக அவர் 2021 ஆம்  ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து வேலைகளை செய்வார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்