அஜித்தின் குட் பேட் அக்லி போஸ்டரால் களைகட்டிய வியாபாரம்!

vinoth

வியாழன், 23 மே 2024 (07:08 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் லைகா நிறுவனத்தின் பொருளாதார காரணங்களால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது. இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 95 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை அஜித் படத்துக்கு நடக்காத மிகப்பெரிய வியாபாரம் இதுவென்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்