“துருவ நட்சத்திரம் கதைக்கு ரஜினி சார் சம்மதம் சொன்னார்… ஆனால்?” – கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (09:45 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி “இந்த கதையை முதலில் சூர்யாவுக்கு சொன்னேன். ஆனால் அவர் ஸ்பை த்ரில்லர் வொர்க் அவுட் ஆகுமா என யோசித்தார். அடுத்து ரஜினி சாருக்கு சொன்னேன். அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. கபாலி படத்தில் நடித்தார்.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்