ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜய்?

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (12:35 IST)
ரஜினி, கமல், விஜய் மூவரும் ஒரே மேடையில் ஏற இருப்பதாக கூறப்படுகிறது.



 
‘அப்பான்னா மட்டும்தாங்க பயம். மத்தபடி எல்லாம் ஓகேங்க…’ என ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் சொல்வாரே ஜெய். அதுமாதிரி, ‘அம்மான்னா மட்டும் தான் பயம். மத்தபடி நாங்களும் அப்பாடக்கர் தான்’ எனச் சொல்லிவந்த கோலிவுட் ஜாம்பவான்களுக்கு, ‘அம்மா’ பயமும் இப்போது இல்லை.எனவே, ஆளுக்கு ஆள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். ‘சிஸ்டம் கெட்டுவிட்டது’ என்று ரஜினி ஒருபக்கம் பேச, ‘தமிழகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என இன்னொரு பக்கம் கமல் பேசி வருகிறார். இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் ஏற்றி அரசியல் பேசவைக்கப் போகிறார், அதிமுகவால் பாதிக்கப்பட்ட ‘தலைவா’ விஜய்.

வருகிற 20ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்தக் காட்சி அரங்கேற இருக்கிறது. ரஜினி, கமல் இருவருக்குமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடப் போகிறார்கள். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து
அடுத்த கட்டுரையில்