ரஜினி, அஜித் படத் தலைப்பில் நடிக்கும் சிம்பு?

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (11:09 IST)
மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக, சிம்பு நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘பில்லா 3’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக  கூறப்படுகிறது. 

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல. அதில் நடித்த சிம்பு ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத்தான் தந்தது. ‘இந்தப் படத்தோடு சிம்புவின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று சொல்லும் அளவுக்கு படுமோசமாக இருந்தது படம். ஆனால், இதற்கெல்லாம் மனம் தளரவில்லை  சிம்பு.
 
‘அடுத்த படம் மாஸாக இருக்க வேண்டும்’ என்று நினைத்து, அவரே ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க, முன்னணி நடிகை ஒருவரிடமும் பேசிவிட்டனர். ‘வனமகன்’ படத்தில் போலீஸாக  வில்லத்தனம் காட்டிய சாம் பால், இந்தப் படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
 
இதெல்லாம் விஷயமல்ல, அந்தப் படத்தின் தலைப்பு, ரஜினி, அஜித் நடித்த ‘பில்லா’ என்பதுதான். 1980ஆம் ஆண்டு ரஜினி  நடித்த படம் ‘பில்லா’. அதே தலைப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான படத்தில் நடித்த அஜித், 2012ஆம் ஆண்டு அதன்  இரண்டாம் பாகத்திலும் நடித்தார். எனவே, இந்தப் படத்துக்கு ‘பில்லா 3’ எனத் தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு.
அடுத்த கட்டுரையில்