மீண்டும் தள்ளிப்போகும் தலைவர் 170 ஷூட்டிங்… ரஜினிதான் காரணமா?

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:02 IST)
ஜெயிலர் படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் இன்னமும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அமோக வெற்றியால் ரஜினி இந்த படத்தின் திரைக்கதையை மேலும் மெருகேற்ற வேண்டும் என ஆசைப்படுவதாகவும் அதனால் இயக்குனரை அழைத்து இது குறித்து பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் இன்னும் சில வாரங்கள் தாமதமாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்