நீச்சல் உடையில் பாதி தண்ணீரில் ரைசாவின் புகைப்படம் – இணையத்தில் வைரல்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (18:00 IST)
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைசாவின் நீச்சலுடைப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தால் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகலாம் என நம்பி சென்றவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதில் ஒரே ஒரு விதிவிலக்கு என்றால் அது ரைசா வில்சன்தான். பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் அவரை யாருக்குமே தெரியாது. ஆனால் வெளியே வந்த பின்னர் அவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உருவாகியுள்ளார்.

 
வரிசையாக படங்களில் நடித்து வரும் அவர் அவ்வபோது சமூகவலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. நீச்சலுடையில் பாதி தண்ணீரில் இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்