ராகவா லாரன்ஸ் 25வது படம்.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 28 அக்டோபர் 2024 (16:59 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் 25வது படத்தின் டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளிவருவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் தற்போது 'துர்கா', 'அதிகாரம்' போன்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
 
இந்நிலையில், தனது 25வது படத்தை சமீபத்தில் அறிவித்த ராகவா லாரன்ஸ், கடந்த செப்டம்பரில் அதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் இதுவொரு மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை காலை 10:30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
 
ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்களும் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்