கமல் படத்தில் ராகவா லாரன்ஸ் என்பது வதந்தியா?

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (22:08 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது 
 
ஆனால் இந்த செய்தி கிட்டதட்ட வதந்தி என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமலஹாசன் தற்போது தேர்தலில் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பின்னர் ஜூன் மாதம்தான் படப்பிடிப்பை தொடங்குவார் என்றும், அதிலும் அவர் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செல்கிறாரா அல்லது விக்ரம் படப்பிடிப்புக்கு செல்வாரா என்பதை இனிமேல்தான் தீர்மானிப்பார் 

இந்த நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியிருக்கும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றே கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் மூன்று படங்களில் பிசியாக இருக்கும்போது இன்னொரு படத்தில் வில்லனாக கமிட்டாக மாட்டார் என்றே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்