அதிமுக, திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் வரும் தேர்தலில் நேருக்கு நேர் பெரும்பாலான தொகுதிகளில் மோத இருக்கும் நிலையில் மூன்றாவது கூட்டணியாக கமல்ஹாசன் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து உள்ளன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஐஜேகே கட்சிக்கு 40 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மீதி உள்ள 154 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம், போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது