ப்ரா தெரிவது ஒன்றும் அவமானம் இல்லை – தொலைக்காட்சி நடிகை கருத்து !

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:36 IST)
பெண்களின் பிரா வெளியே தெரிவது ஒன்றும் அவமானம் இல்லை என்றும் அது மிகவும் சாதாரணமானதுதான் என்றும் தொலைககாட்சி நடிகை ராதிகா மதன் தெரிவித்துள்ளார்.

MTV சமீபத்தில் "Baar Bra Dekho" என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பெண்களின் உடை சுதந்திரம் பற்றி தொலைக்காட்சி சீரியல் நடிகையான ராதிகா மதன் பேசினார். அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

அவரது பேச்சில் ’பெண்கள் பொதுவெளியில் கண் இமைக்காமல் பார்ப்பது மற்றும் தொடுதல் போன்ற பல அத்துமீறல்களை எதிர்கொள்கின்றனர். இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர்களின் பிரா ஸ்ராப் அவளுக்கே தெரியாமல் வெளியே தெரிந்தாலும் அந்த பெண்ணை தவறாகப் பேசும் மக்கள் இன்றளவும் உள்ளார்கள் என்பதை அறிய வேதனையாக உள்ளது.

ஆடைகளை வைத்து ஒருவரை தீர்மானிக்கக் கூடாது. ஒருவருக்கு எந்த ஆடை சௌகர்யமாக இருக்கிறதோ அதை அணிந்து அவர் பயணிக்கட்டும். பிரா வெளியே தெரிவது ஒன்றும் அவமானம் இல்லை என நாம் அனைவருக்கும் சொல்வோம். ’ எனக் கூறியுள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் டிக்டாக்கில் இதே கருத்தை வெளிப்படுத்திய ஒரு பெண் தொடர்ந்து கேலி செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்