மேடையில் சின்மயியை வெளுத்து வாங்கிய ராதாரவி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (11:56 IST)
"மீடூ சர்ச்சை" வைரமுத்து சின்மயியை தொடர்ந்து நடிகர் ராதாரவி மீது சமீபத்தில் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு வைக்க, அதை சின்மயி தன் டுவிட்டரில் ஷேர் செய்தார்.
எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாகவும், நக்கலாவும்  கமெண்ட் அடித்து பேசுபவர் நடிகர் ராதாரவி, இவர் மேடை ஏறினாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி தான் தன்  மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த  ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி  ‘ஊர்ல சாமியர் எல்லாம் ரேப் பண்றாங்க, அவுங்க மேல யாருமே புகார் கொடுக்க மாட்டாங்க. ஆனா அந்த சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னை வந்து குறை சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது.
 
மேலும், என் மீது புகார் வைத்ததற்கு நான் நீதிமன்றத்தை சந்திக்க தயாராகவுள்ளேன், ஆனால், இதன் மூலம் புகார் வைத்துள்ள நீங்கள் உங்களையே தரம் தாழ்த்திக்கொள்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்