அஜித் படத்தில் விஷால் பட வில்லன்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (14:45 IST)
அஜித் படத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அஜித் நடிப்பில் சிவா இயக்க இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என 3 காமெடியன்கள் நடிக்கின்றனர். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இதன்மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான்.
 
இந்த படத்தின் ஷூட்டிங் தயாரிப்பாளர்கள் சங்க ஸ்டிரைக் முடிந்த பிறகு, ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கவுள்ளது.
 
இந்நிலையில், இந்த படத்தில் அஜித்துடன் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்