’ஒத்த செருப்பு’ படத்திற்கு ரூ.1 லட்சம் விருது கொடுத்த அண்டை மாநிலம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (19:39 IST)
’ஒத்த செருப்பு’ படத்திற்கு ரூ.1 லட்சம் விருது கொடுத்த அண்டை மாநிலம்!
பார்த்திபன் நடித்து இயக்கிய ’ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்த படம் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய இந்த படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விருது ஒன்று பெற்றுள்ளது 
 
புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை நடத்திய இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது ’ஒத்த செருப்பு’படத்திற்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையை இயக்குனர் பார்த்திபனுக்கு புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் அவர்கள் வழங்கினார்
 
’ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு மேலும் ஒரு விருது கிடைத்தது குறித்து தான் பெருமைப்படுவதாக இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்