நயன்தாராவைச் சந்தித்த முன்னணி பாலிவுட் நடிகை

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (13:19 IST)
நயன்தாராவுடன், முன்னணி பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா சந்தித்துப் பேசியுள்ளார்.
 



 

தன்னுடைய பிஸி ஷெட்யூலுக்கு நடுவே, பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நியூயார்க் பறந்துள்ளார் நயன்தாரா. அங்கு, தன்னுடைய காதலரான விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக பொழுதைப்போக்கி வருகிறார் நயன். அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள், நயன்தாராவை விக்னேஷ் சிவன் எடுத்த படங்கள் எல்லாமே சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இந்நிலையில், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா, நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவரும் நியூயார்க்கில் திட்டமிட்டு சந்தித்தார்களா இல்லை எதேச்சையாக இந்த சந்திப்பு நடந்ததா எனத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்