தெலுங்கு மக்களின் ‘ராணி’யாகும் தமன்னா

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (12:49 IST)
‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.


 

 
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘குயின்’. இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது. பல நாட்களாக இழுத்துக்கொண்டே வந்த இந்த ரீமேக் விஷயம், ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

தமிழில் கங்கனா கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு, ‘பாரிஸ் பாரிஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர். தெலுங்கில் இந்தப் படத்தை, நீலகந்தா ரெட்டி இயக்குகிறார். கங்கனா கேரக்டரில் தமன்னா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்தத் தகவலை அவரே உறுதி செய்துள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்