மீண்டும் ஐட்டம் டான்ஸ்... பிரியாமணியை பார்த்ததும் கட்டியணைத்த ஷாருக் கான்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (14:23 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் உட்பட அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.
 
ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு நடிகை பிரியாமணி ஆடுகிறாராம். இவர் ஏற்கனவே ஷாருக்கான் உடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஆடியிருந்தார். 
 
இந்நிலையில் ஜவான் படப்பிடிப்பில் பிரியாமணியை பார்த்ததும் ஷாருக்கான் அவரை கட்டிப்பிடித்து , 'சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி' என கூறினாராம். இது குறித்து கூறியுள்ள பிரியாமணி , " தன்னை இன்னும் ஷாருக் கான் மறக்காமல் இருப்பது தனக்கே ஆச்சர்யம் என கூறி இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்