பிரியதர்ஷன் படம் ஓடிடியில் ரிலீஸ் !

Webdunia
திங்கள், 24 மே 2021 (23:44 IST)
இந்திய சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பிரியதர்சன். இவர் இயக்கிய சிறைச்சாலை, லேசா லேசா, காஞ்சிபுரம் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பிரியதர்ஷன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ஹங்கமா என்ற படத்தின் இரண்டாம் பாகம்.

இப்படத்தின் பரேஷ் ராவல், ஷில்பா ஷெட்டி மீஸான், பிரணிதா போன்றோர் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், ஹங்கமா -2 படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தியேட்டர்களின் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இரண்டாவது கொரொனா அலை பரவிவருவதால் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்