மெகா ஸ்டார் படத்தில் நடிக்க ஒப்பந்தமான தேசிய விருது பெற்ற நடிகை!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:34 IST)
லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியோடு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியா மணி.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில்வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை தமிழ் சினிமா இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் இப்போது நடந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் பிரியா மணி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பருத்தி வீரன் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வரை சென்ற பிரியாமணி அதன்  பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் பல மொழி படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்