நாகரீகமா பேச கத்துக்கோங்க.... ரசிகர்களால் கடுங்கோபமடைந்த பிரியா பவானி சங்கர்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (13:25 IST)
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.

அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். சிங்கிள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் பிரியா பவானி கொஞ்சம் கேப் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகிவிடுவார்.

அந்தவகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட ஒரு பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்மறையான  கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தெளிவான விளக்கத்தை பிரியா பவானி சங்கர் கொடுத்திருந்ததும்  அவரின் ரசிகர்கள் அந்த பெண்ணை விடாமல் மோசமான வார்த்தைகளால் திட்டிதீர்த்தனர்.

இத்தனால் செம கடுப்பான பிரியா, " அந்த பெண்ணை திட்டும் உரிமை நமக்கு இல்லை, நாகரீகமாக தான் பதில் சொல்ல வேண்டும்.. எனக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதற்காக தவறான வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டுவது எனக்கு பிடிக்கவில்லை.  நாகரீகமாக பதில் அளித்தவர்களுக்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த குழந்தையின் முகம்! இனி கொரோனாவோடு வாழ நாம் பழகிக்குவோம். சரி! இந்த குழந்தையின் முகம் நமக்குள்ளே தரும் குற்ற உணர்ச்சியும் பழகிடுமா? இந்த நவீன உலகத்தில் சீக்கிரமே மருந்தோ, vaccination கூட கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. ஆனால் நடந்து தேயும் தொழிலாளியின் கண்ணீர் கறையை எதை கொண்டும் மறைக்க முடியாது. “அவங்கள யாரு தண்டவாளத்துல படுக்க சொன்னது?” “பேசிகிட்டு இருக்காம மூட்டை முடிச்சிய தூக்கிட்டு நடக்க உதவுங்க” போன்ற அதிகார குரல்கள் நம் நிதர்சனத்தை காட்டிக்கொண்டே இருக்கும். பால்கனி கைதட்டல்களும், ஹெலிகாப்டர் பூ மழையும் எதுக்கு? தனித்து தெருவில் விடப்பட்டவர்களுக்கு வேடிக்கையா? தனித்து விடப்பட்ட ஒரு மாபொரும் கூட்டத்தின் கண்ணீருக்கும் ரத்ததுக்கும் மேல் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி எந்த கோட்டையை கட்டப்போறோம்? அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை -குறள் அந்த கண்ணீர் எந்த கோட்டையையும் அழிக்கும்னு பொருள் Cartoon by @sardhaart

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்