கொரோனா வார்டில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் – கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்!

Webdunia
சனி, 30 மே 2020 (14:58 IST)
இந்தியாவில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. பாதிக்கப்படும் நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா பீதியைக் காட்டி அங்கே வருபவர்களிடம் மருத்துவமனைகள் அதிகமான தொகை வசூலிப்பதாக சொல்லப்படுகிறது. சாதாரண வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்றும் 600 ரூபாய் மதிப்புள்ள பிபிஇ கிட்களை 10,000 ரூபாய்க்கு கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஐசியுவில் தங்கவேண்டும் என்றால் இன்னும் அதிக தொகை செலுத்தவேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. பேரிடர் காலத்திலும் இப்படி நோயாளிகளிடம் இருந்து காசுபிடுங்கும், முதலாளிகளின் லாபவெறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமான செய்தியை ஆங்கில ஊடகமான டைம்ஸ் நௌ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்