அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?

சனி, 30 மே 2020 (11:05 IST)
13 நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல். 

 
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நாளையோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து பின்னர் பிரதமர் மோடியுடனும் இது குறித்து பகிர்ந்துக்கொண்டார். இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களான சென்னை உள்பட 13 நகரங்களில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 
 
எனவே, இந்த 13 நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வழிகாட்டுதல்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஹவுரா, கொல்கத்தா, அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், ஜோத்பூர், சூரத் மற்றும் இந்தூர் ஆகிய 13 நகரங்கலில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்