விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறாரா பிரசாந்த்?

vinoth
சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:45 IST)
பிரசாந்த் நடிப்பில், அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்துக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. முதல் நாளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், விடுமுறை நாட்களில் இன்னும் அதிகளவில் ரசிகர்களை தியேட்டர்களுக்குக் கொண்டுவரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரசாந்த் இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் மட்டும் இல்லாது இந்தியிலும் அவர் படங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு படம் விஜய் ஆண்டனி நடிகராக அறிமுகமான ‘நான்’ திரைப்படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்