கடன் வாங்கி கூட உதவி செய்வேன் - வில்லன் நடிகரின் ஹீரோயிசத்தை பாராட்டும் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (14:20 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. சாப்பாட்டிற்கே வழியின்றி தவிக்கும் மக்களுக்கு அரசாங்கம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. மேலும் நிறைய அறக்கட்டளைகள் , தொண்டு நிறுவனங்கள் , பிரபலங்கள் என் அனைவரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் மக்களுக்கு காய்கறி , அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார். இது குறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''என்னுடைய நிதி வளங்கள் குறைந்தாலும் கடன் வாங்கியாவது மக்களுக்கு உதவி செய்வேன். காரணம் என்னால் மீண்டும் சம்பாதிக்கமுடியும் என்பது எனக்குத் தெரியும். ஒன்றாக போராடுவோம். மீண்டும் உயிர்ப்பிப்போம்'' என்று கூறி பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த செயல் மற்ற செலிபிரிட்டிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்