பிரபாஸ் - அனுஷ்கா விரைவில் காதல் திருமணம்?

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (14:57 IST)
பிரபாஸ் மற்றும் அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 

 
தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளும் நிலையில் உள்ளனர். இருவரின் வீட்டாரும் அவர்களுக்கு வரன் பார்த்து வருதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இருவரும் காதல் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. பாகுபலி படத்திற்கு முன்பே இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அண்மையில் அனுஷ்கா, அடுத்தடுத்த படங்களில் பிரபாஸ் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்து இருந்தார்.
 
தற்போது இருவரும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் காட்டு தீப்போல் வேகமாக பரவி வருகிறது. இருவரும் திருமணம் செய்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் தங்கள் ஆர்வத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்