ரஜினி பட தயாரிப்பாளர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய கோலிவுட்!

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (14:06 IST)
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் பி.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
 

 
இந்திய மல்டிநேஷனல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான பிரமிட் சாய்மிரா தயாரிப்பு 2000 காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் இசை, பொழுதுபோக்கு காட்சிகள் போன்றவற்றில்  தனக்கென நிரந்தர இடம் பிடித்த ஒன்று.  
 
கடந்த 2007 ஆம் ஆண்டு  'கண்ணாமூச்சி  ஏனடா' என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார், மற்றும் 'மொழி' படத்தை விநியோகம் செய்துள்ளார். பின்னர் ஸ்பை த்ரில்லர் படமான முக்பீர் (2008) ஐ இந்தியில் தயாரித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை விநியோகம் செய்திருக்கிறார். 
 
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகே நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பி.எஸ்.சுவாமிநாதன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ள பி.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பல திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்