கே.பாலசந்தரின் மனைவி காலமானார்.

திங்கள், 26 நவம்பர் 2018 (08:01 IST)
மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் மனைவி ராஜம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 82

ராஜம் அவர்கள் சமிபகாலமாக உடல்நலமின்றி இருந்ததாகவும், இந்த நிலையில் அவர் இன்று காலமானதாகவும் அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளார்.

ராஜம் அவர்களின் உடல் 34, வாரண்சாலை, மயிலாப்பூர், சென்னை.4 என்ற முகவரியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ராஜம் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்