சன்னி லியோன் படத்தின் தலைப்பை வெளியிடும் முன்னணி நடிகர்கள்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (18:35 IST)
சன்னி லியோன் நடிக்கும் படத்தின் தலைப்பை, முன்னணி நடிகர்கள் வெளியிட உள்ளனர்.

 
ஆபாசப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். தற்போது பாலிவுட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். தமிழில் கூட ‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
 
முதன்முறையாக சரித்திரப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் சன்னி லியோன். இந்தப் படத்தை, ‘செளகார்பேட்டை’ படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
 
தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இந்தப் படம் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பு, வருகிற 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் இந்தத் தலைப்பை வெளியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்