விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், கலக்கப்போவதுயாரு, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்துள்ளார். இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டீம் லீடராக இருந்து வருகிறார். முதலில் அவர் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார்.
இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் ஒரு பேட்டியில் யாரைப்போல் வருங்காலத்தில் வர வேண்டும்? என்று கேட்டதற்கு, இவங்களை போல் ஆக வேண்டும் என்று நினைத்தது, பாலிவுட்டில் இருக்கும் பாரதி என்பவரைதான். அவங்களுக்கு பெரிய பெயர் இருக்கிறது. ஷாருக்கானில் இருந்து யார் வந்தாலும் அவர் கலக்கிவிடுவார். அதோடு கபில்ஷர்மா அடுத்து மிகவும் பிடிக்கும். பாலிவுட்டில் பாரதி எப்படி பிரபலமாக இருக்கிறாரோ, அதேபோல் நான் தமிழில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களை போல் திறமைகொண்டவர்கள் யாரும் தமிழில் இல்லை என்று கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.