அந்தகன் படத்தில் இணைந்த விஜய் பட குழந்தை நட்சத்திரம்!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (08:12 IST)
பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் மாஸ்டர் பட புகழ் பூவையார் இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலக இப்போது பிரசாந்தின் தந்தை தியாகராஜனே அந்த படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி மற்றும் கே எஸ் ரவிகுமார் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்போது வனிதா விஜயகுமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனிக்கு மனைவியாக அவர் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் ஒரு முக்கியமான குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான பூவையார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்