என்னய்யா இம்சை அரசன் வடிவேலு மாதிரி ஆக்கிட்டீங்க… வைரலாகும் பொன்னியின் செல்வன் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:41 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்தது.

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரோடு படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் வெளியான டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த விழாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த போஸ்டரில் திரிஷாவின் உடலும் ஐஸ்வர்யா ராயின் தலையும் இணைந்திருப்பது போல தவறாக ஒட்டியுள்ளனர். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இம்சை அரசன் படத்தில் வடிவேலு ஓவியம் வரைந்துகொள்ளும் காட்சி ஞாபகம் வருவதாக இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்