பொன்னியின் செல்வனில் வெளியூர் மேக்கப்மேன்கள்… தொடங்கியது அடுத்த பிரச்சனை!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக கிட்டத்தட்ட 150 மேக்கப் மேன்கள் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் படத்தின் முக்கியமானக் காட்சிகளை எல்லாம் படமாக்க கிட்டத்தட்ட 150 மேக்கப்மேன்கள் வரை மணிரத்னம் பயன்படுத்துகிறாராம். ஆனால் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேக்கப் மேன்கள் பயன்படுத்தப்பட வில்லையாம். இது தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்