பொன்னியின் செல்வன் -2 பட ஜிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
'லைகா 'சுபாஸ்கரன் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில்,.ஏ.ஆ.ரஹ்மான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யாராய், திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது.
அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இப்படத்தின் ஜிலிம்ஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
அதில்,வீர ராஜ வீர என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
From the first beat to the last, #VeeraRajaVeera is pure adrenaline!
Lyrical video from tomorrow