இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு அனிமேட்ரானிக்ஸ் படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த படத்தில் கதாநாயகனோடு ஒரு முக்கிய வேடத்தில் குரங்கு ஒன்று நடிக்க உள்ளதாக இருந்தது. முக்கியமான வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்க இருந்தார். ஆனால் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, அக்ஷய் குமாரின் பல படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் தயாரிப்பு நிறுவனம் இப்போது அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாம். இதை முருகதாஸே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.