பொன்னியின் செல்வன் படக் காட்சிகள் லீக்...படக்குழு அதிர்ச்சி

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:14 IST)
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது லீக் ஆகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற காலத்தினால் அழியாத புகழ்பெற்ற நாவலை திரைப்படமாக்க முயற்சியில் மணிரத்தினம் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.

இந்தப் படத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது லீக் ஆகியுள்ளது. அதில், அமரன் கல்வி தனது பொன்னியின் செல்வன்நாவலில் எழுதியுள்ளதுபோன்று ஓவியங்கள் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்