சிம்பு வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு. பணமதிப்பிழப்பு பாடலால் சிக்கல்?

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (13:55 IST)
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து ஒருவருடம் ஆனதை அடுத்து சமீபத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை வெளியிட்டார். கபிலன் வைரமுத்து எழுதிய இந்த பாடல் 'தட்றோம் தூக்றோம்' என்று தொடங்கும் வரிகளுடன் வெளிவந்தது.


 


பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் குறித்த இந்த இந்த பாடலை சிம்புவே பாடியிருந்தார். இந்த பாடலை அனைத்து தரப்பினர்களும். குறிப்பாக இளைஞர்கள் இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் சிம்புவின் தி.நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்