பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கப்படுகிறது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 38 சதவீதம் பேர் வெற்றி அடைந்துள்ளது எனவும், 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும் கூறி உள்ளனர்.
அதன் பின் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற மக்கள் வங்கிகளில் மாற்ற வரிசையில் நாள் கணக்கில் தவம் கிடந்தார்கள். வங்கியில் பணம் செலுத்தியவர்கள், புதிய பணத்தை எடுக்க ஏ.டி.எம் மையங்களின் முன் குவிந்தனர். பல ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர்.