திகில் காட்சிகளுடன் வெளியானது பீட்சா 3 டீசர்! இணையத்தில் வரவேற்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (16:57 IST)
பீட்சா 3 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பாபி சிம்ஹா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீட்சா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பீட்சா 2 என்ற படத்தை தயாரித்தார் தயாரிப்பாளர் சி வி குமார். ஆனால் முதல் பாகத்துக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் பீட்சா என்ற வெற்றிப்படத்தின் பிராண்ட் பெயரை பயன்படுத்துவது மட்டுமே குறிக்கோளாக இருந்ததாக தெரிந்தது. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு பீட்சா 3 : தி மம்மி என்ற படத்தை தயாரிக்க உள்ளார் சி வி குமார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்குகிறார். அஷ்வின் கக்குமானு, காளி வெங்கட், ரவீனா தாஹா, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியானது. திகில் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்