நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா மிஷ்கினின் பிசாசு 2?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:11 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க் கொண்டே உள்ளது.

மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’.  2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்துக்கும் இந்த படத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் ரிலீஸானது.

இந்த படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக முன்பு  படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் சமீபத்தில் அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது. இந்நிலையில் இப்போது நேரடியாக ஜி 5 ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்