ஜெயலலிதாவின் மர்ம மறைவை காட்சிப்படுத்தும் "பரமபதம் விளையாட்டு" பட ஸ்னீக் பீக்!

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (11:36 IST)
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
அந்தவகையில் தற்போது இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் த்ரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்தா, வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன், மற்றும் பேபி மானஸ்வி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பல நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் கிடப்பில் கிடந்தது வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என படக்குழு அறிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளனர். மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் இறப்பின் மரமங்களை காட்சி படுத்தும் விதத்தில் இந்த ஸ்னீக் பீக் காட்சி உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்