'பல்லு படாம பாத்துக்க' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (14:17 IST)
அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள அடல்ட் காமெடி படமான பல்லு படாம பாத்துக்க திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜெயம் ரவியின் மிருதன் படத்தை எடுத்த விஜய் வரதராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா ஷெட்டி, ஆனந்த்பாபு, ஜெகன், தீனா, ரிஷி மற்றும் அப்துல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜோம்பியோ  காமெடி படமான 'பல்லு படாம பாத்துக்க' திரைப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.  'ஜில் ஜங் ஜக் ' புகழ் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
ஹர ஹர மகாதேவி , இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை தயாரித்த ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் பாலமுரளி பாலு , 'பல்லு படாம பாத்துக்க ' திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.  வரும் ஜூன் 12ஆம் தேதி இப்படம் திரைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்