மீண்டும் இணையும் அட்டகத்தி கூட்டணி.. பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?

Webdunia
புதன், 24 மே 2023 (08:11 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

இப்போது விக்ரம் இயக்கத்தில் தங்கலான் படத்தை இயக்கி வரும் பா ரஞ்சித் அடுத்து கமல்ஹாசனுக்காக ஒரு கதையையும் சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளார். இதற்கிடையில் தங்கலான் படத்தை முடித்ததும் ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்