என்னையும் விஜய்யையும் பிரிக்கப் பார்க்கிறார்கள் – விஜய் மேனேஜர் உருக்கம் !

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (13:45 IST)
விஜய்யின் மேனேஜர் பிடி செல்வக்குமாருக்கும் விஜய்யின் மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று நேற்று வெளியான அறிக்கைக்கு பி டி செல்வக்குமார் பதிலளித்துள்ளார்.

விஜய்யின் ஆரம்பக் காலம் முதல் அவருக்கும் அவரது படங்களுக்கும் மக்கள் தொடர்பாளராக இருந்தவர் பிடி செல்வக்குமார். அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளரான இவர் விஜய்யின் பி.ஆர். ஓ. என்ற பெயர் பிளஸ்ஸாக அமைந்ததால் பலப் படங்களுக்குப் பி.ஆர்.ஓ. ஆகவும் வேலை செய்திருக்கிறார். மேலும் ஒன்பதுல குரு என்ற படத்தை இயக்கியும் விஜய் நடித்த புலி உள்ளிட்ட சிலப் படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஆனால் இவருக்கும் விஜய்க்கும் இப்போது நல்ல உறவு இல்லை எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் செலவ்க்குமார்  ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த போது விஜய்யைப் பற்றிப் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். இதில் அவர் கூறியப் பல கருத்துகள் விஜய் தரப்புக்கு உவப்பானதாக இல்லை எனத் தோன்றுகிறது. அதனால் தனது மக்கள் இயக்கம் மூலமாக பி டி செல்வக்குமாருக்கும் தங்கள் மக்கள் இயக்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், அவர் இப்போது விஜய்க்கு மேனேஜராக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். மேலும் அவர் கூறும் தனிப்பட்ட கருத்துகளை விஜய்யின் கருத்தாகவோ அல்லது மக்கள் இயக்கத்தின் கருத்தாகவோ யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு மக்கள் இயக்க நிர்வாகி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து அந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செல்வக்குமார் பதில் அளித்துள்ளார். அதில் தன்னையும் விஜய்யையும் சிலர் சதி செய்து பிரிக்கப்பார்க்கிறார்கள் எனவும் தான் இன்று வரை விஜய்க்கும், விஜய் குடும்பத்திற்கும் விஸ்வாசமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் மக்கள் இயக்கத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்