என் பின்னாடி சுத்தறவங்களை பிடிக்காது! என்னை வெறுக்கறவங்களைத்தான் பிடிக்கும்: ஓவியாடா....

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (23:30 IST)
பொதுவாக காதலிக்கும் பெண்களில் பெரும்பாலானோர்களுக்கு தங்களை சுற்றி சுற்றி வருபவர்களைத்தான் பிடிக்கும். ஆனால் எதிலும் வித்தியாசமாக இருக்கும் ஓவியா இன்று தனது காதலுக்கான ஃபார்முலாவை கூறியுள்ளார்.



 
 
நான் உன்னை வெறுத்து வெறுத்து விலகி போனாலும் ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என்று இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் கேட்க, அதற்கு ஓவியா, 'எனக்கு எப்பவுமே என் பின்னால் சுற்றுபவர்களை பிடிக்காது, அவர்களை நான் கண்டுகொள்ளவே மாட்டேன், ஆனால் என்னை யார் வெறுத்து விலகி போகிறார்களோ அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று கூறினார்.
 
ஓவியாவின் இந்த காதல் பார்முலாவை கேட்டு ஆரவ்வும், சினேகிதனும் ஆச்சரியம் அடைந்தனர். எதுவாக இருந்தாலும் கள்ளங்கபடம் இன்றி ஓப்பனாக வெளியே சொல்லும் ஓவியாவின் இந்த குணம் தான் தமிழக மக்களையே கட்டி போட்டு வைத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்